சென்னையிலிருந்து இலங்கை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இன்று(பிப்.7) 106 பேர் சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தனர். அவர்களிடம் சுங்கத்துறையினா் அலுவலர்கள் சோதனையில் நடத்தினர். இந்த சோதனையில் மூன்று பயணிகளிடம் வெளிநாட்டு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் ரூ.24.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் - foreign currency exchange in chennai
சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.24.29 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பணத்தை கைப்பற்றிய அலுவலர்கள் மூவரையும் கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.24.29 லட்சம் என்பதும், கைது செய்யப்பட்ட பயணிகளில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் மற்ற இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குடியரசு தினத்தன்று, துபாயிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரே நாளில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்