இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் சுற்றுலா விசாவில் வந்தனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
மேலும் ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே மாதம் 17ஆம் தேதி வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள், மீண்டும் தங்கள் நாட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாட்டிற்குச் சுற்றுலா வந்த பயணிகளை திரும்பி அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது.