தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தங்க நகை பட்டறையில் பணிபுரிந்த 22 பேருக்கு கரோனா உறுதி! - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கரோனா பாதிப்புக்குள்ளான 22 பேரும் தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22 goldsmiths affected by corona
22 goldsmiths affected by corona

By

Published : Mar 30, 2021, 6:29 PM IST

சென்னை: தங்க நகை பட்டறையில் பணிபுரிந்த 54 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டதில், 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் தங்க நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 54 பேர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், 54 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்குள்ளான 22 பேரும் தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "இது சிறிய அளவிலான பரவல் மட்டுமே, பெரிய அளவிலான பாதிப்பை இது ஏற்படுத்தாது. பெரிய அளவில் பரவ விடமாட்டோம், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details