சென்னை: சென்னை பல்கலைக் கழத்தின் அரியர் தேர்வுகள், வரும் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து, அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அந்த தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் டிசம்பர் 21ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் 2020 நவம்பர், ஏப்ரல் 2021, நம்பர் 2021 ஆகிய பருவங்களில் நடைபெறும் தேர்வினை எழுதலாம்.
ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு கூடுதல் மதிப்பெண் வேண்டும் எனில் அரியர் தேர்வினை எழுதலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.