தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"பொதுத்துறை பங்குகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும்" - இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் - DMK Young wing

சென்னை: ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை பங்குகளை தமிழ்நாடு அரசு வாங்க முன்வர வேண்டும் என்றும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Udhayanidhi
Udhayanidhi

By

Published : Jul 19, 2020, 10:52 PM IST

திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களின் கூட்டம் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சி செயல்பாடுகள் தவிர பல முக்கிய சமூக பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும் இதுபோன்ற பொதுத்துறை பங்குகளை வாங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், கிரிமிலேயர் வரம்புக்கு சம்பளத்தை அளவீடாக எடுக்கக்கூடாது, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும், மின் கட்டணம் உயர்வுக்கு கண்டனம் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: ரயில்களை தனியார்மயமாக்குவது யாருக்கு நன்மை பயக்கும்?

ABOUT THE AUTHOR

...view details