- மார்ச் 24 - மாநில கரோனா எண்ணிக்கை 9 - நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு லாக்டவுன் என மோடி அறிவிப்பு
- மார்ச் 25 - மாநில கரோனா எண்ணிக்கை 12 - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பை தடுக்க அவசர நிதி ரூ. 500 கோடி ஒதுக்கீடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்காக பிரத்யேகமாக 9 ஆயிரத்து 266 படுக்கைகள் ஒதுக்கீடு.
- மார்ச் 26 - மாநில கரோனா எண்ணிக்கை - 26 - மாநிலத்தில் உள்ள அடித்தட்டு ஏழை எளிய மக்கள் நலனுக்காக ரூ.3,280 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு. அனைத்து ரேஷன் அட்டைதாரார்களுக்கும் ரூ.1,000 சிறப்பு நிதி, ஏப்ரல் மாத ரேஷன் பொருள்கள் இலவசம்.
- மார்ச் 27 - மாநில கரோனா எண்ணிக்கை - 29 - முதலமைச்சர் அறிவித்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.2,187.8 கோடி ஒதுக்கீடு.
- மார்ச் 28 - மாநில கரோனா எண்ணிக்கை - 38 - சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மருத்தவமனை ஏற்பாடு. 500 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 லேப் டெக்னீசியன்கள் ஆகியோர் உடனடியாக நியமனம்.
- மார்ச் 29 - மாநில கரோனா எண்ணிக்கை - 42 - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் நிதியுதவி அளித்திட கோரிக்கை.
- மார்ச் 30 - மாநில கரோனா எண்ணிக்கை 50 - மாநிலத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான செயல்பாடுகளுக்கு அனுமதி.
- மார்ச் 31 - மாநில கரோனா எண்ணிக்கை - 67 - மருத்துவமணையில் தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க மருத்துவர்களை இலவச தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற அனுமதி.
- ஏப்ரல் 1 - மாநில கரோனா எண்ணிக்கை - 124 - பூ உற்பத்தி செய்யும் விவசாயிகள், அந்தத் தொழிலில் ஈடுபடுவோர் துயரை சீர் செய்ய தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பில் சிறப்பு கொள்முதல் நடவடிக்கை ஏற்பாடு.
- ஏப்ரல் 2 - மாநில கரோனா எண்ணிக்கை - 234 - மாநில கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த ஜூன் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீடிப்பு.
- ஏப்ரல் 3 - மாநில கரோனா எண்ணிக்கை - 309
- ஏப்ரல் 4 - மாநில கரோனா எண்ணிக்கை - 411 - கரோனா நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு உடனடி கடன் தொகை வழங்கப்பட்டது.
- ஏப்ரல் 5 - மாநில கரோனா எண்ணிக்கை - 485 - மாநிலம் முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்பாக சீரான தகவல் பெற http://stopcoronatn.in/ என்ற இணையதளம் தொடக்கம்.
- ஏப்ரல் 6 - மாநில கரோனா எண்ணிக்கை - 571 - மாநில மக்களின் மனநலன் சீராக இருக்க மாநில மனநல மருத்துவ சங்க அமைப்பு தொலைபேசி மூலம் இலவச மனநல ஆலோசனை அளிக்க முடிவு
- ஏப்ரல் 7 - மாநில கரோனா எண்ணிக்கை - 621 - கரோனா பாதிப்பு பாதுகாப்பு மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அரசு சிறப்பு நிதி சலுகை.
- ஏப்ரல் 8 - மாநில கரோனா எண்ணிக்கை - 690 - கரோனா பாதிப்பிற்காக மாநிலம் முழுவதும் 21 பிரத்யேக மருத்துவமனைகள் ஏற்பாடு.
- ஏப்ரல் 9 - மாநில கரோனா எண்ணிக்கை - 738 - மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சுமார் 100 கோடி ரூபாய் கரோனா பாதிப்புக்காக ஒதுக்கீடு.
- ஏப்ரல் 10 - மாநில கரோனா எண்ணிக்கை - 834 - சுமார் 8.20 லட்சம் அமைப்பு சாரரா தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தல ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
- ஏப்ரல் 11 - மாநில கரோனா எண்ணிக்கை - 911 - மாநிலம் முழுவதும் உள்ள 1.95 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு.
- ஏப்ரல் 12 - மாநில கரோனா எண்ணிக்கை - 969 - தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் நிவாரண நிதியிலிருந்து அனைத்து உறுப்பினர்களும் தலா ஒரு கோடி ரூபாய் நிதி கரோனா பாதிப்பிற்காக ஒதுக்கீடு.
- ஏப்ரல் 13 - மாநில கரோனா எண்ணிக்கை - 1,173- மாநில விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை குளிர்சாதன மையங்களில் வைக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என முதலமைச்சர் அறிவிப்பு
- ஏப்ரல் 14 - மாநில கரோனா எண்ணிக்கை - 1, 204 - மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
21 நாட்கள் லாக்டவுன்; தமிழ்நாடு கடந்த வந்த பாதை - coronavirus 21 days lockdown
பிரதமர் நரேந்திர மோடி முதலில் அறிவித்த லாக்டவுனில் தமிழ்நாடு கடந்த வந்த பாதையை பார்க்கலாம்.
EPS
இதையும் பாருங்க: விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய கரோனா