தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பலர் கரோனா தொற்றிலிருந்து மீண்டும் வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர், 14 நாள்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று 21 பேர் வீடு திரும்பினர்! - கரோனா
சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுவரை ஆயிரத்து 323 பேர் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த மார்ச் மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் தற்போது குணமடைந்த அனைவரும் கடந்த 2 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள். குணமடைந்த அனைவரும் 14 நாள்கள் தங்களது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் எனவும், மீண்டும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற 10 பேர் - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்