தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் 8 பேர் கொண்ட தேர்தல் அலுவலர்கள் குழு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தது. இதில் நேற்று (பிப். 10) அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (பிப். 11)ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஒழுங்குபடுத்தும் முகாம்களுடன் தேர்தல் ஆணையக் குழுவினர ஆலோசனை மேற்கொண்டனர்.