தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீன அதிபர் முகமூடியை அணிந்து அவரை வரவேற்ற பள்ளி மாணவர்கள்...! - students wearing masks of Chinese President Xi Jinping

சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் இரண்டாயிரம் மாணவர்கள் சீன அதிபரின் முகமூடியை அணிந்துகொண்டு, அவரின் பெயர் வடிவில் நின்றுகொண்டு ஷி ஜின்பிங்கை வரவேற்றனர்.

students wearing masks of Chinese President Xi Jinping

By

Published : Oct 10, 2019, 1:02 PM IST

Updated : Oct 10, 2019, 1:18 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளையும் (அக். 11) நாளை மறுநாளும் (அக். 12) இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

தமிழ்நாடு அரசும் இரு தலைவர்களையும் வரவேற்பதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாயிரம் மாணவர்கள், சீன அதிபரின் முகம் பதித்த முகமூடியை அணிந்து கொண்டு அவரின் பெயர் வடிவில் நின்றுகொண்டு சீன அதிபரை வரவேற்றனர்.

சீன அதிபரின் முகமூடி அணிந்து சீன அதிபரை வரவேற்ற பள்ளி மாணவர்கள்

சீன அதிபர் சென்னை வருவதற்கு முன்பே, வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை... வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை!

Last Updated : Oct 10, 2019, 1:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details