இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மனிதவள மேம்பாட்டினை வலுபடுத்தும் விதமாக, சென்னையில் பணிபுரியும் வகையில் மேலும், 2,000 செவிலியரை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நியமித்து, பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
இச்செவிலியர் உடனடியாகப் பணியில் இணையத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு மாதம் 14,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவுகளை அரசே ஏற்கும். இதன்மூலம் சென்னையில் கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைப் பணிகள் மேலும் வலுவடையும் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.