சென்னை: மேற்கு தாம்பரம் இரும்புலியூர் பெரியார் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செந்தில்குமார்(36). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்புகையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், அதே குடியிருப்பில் வசித்து வரும் தமிழ்ச்செல்வன் என்பவரின் வீட்டின் பூட்டையும் உடைத்து பீரோவில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இரும்புலியூர் பெரியார் குடியிருப்பு இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கை ரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை