சென்னை: அம்பத்தூர் அருகே கொரட்டூர் பகுதியில் இரவில் இருசக்கர வாகன திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, பகலில் வீட்டின் வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் குறிவைத்து திருடுவதாகப் புகார்கள் எழுந்து வந்தன. அதன்படி, கடந்த ஐந்து நாட்களுக்குள் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுப் போயின.
கடந்த 4ஆம் தேதி பட்டப்பகலில் மாதனாங்குப்பத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து பல்சர் இருசக்கர வாகனம் ஒன்று திருடுப் போனது. இவ்வாறு பகல் நேரத்தில் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை குறி வைத்து கள்ளச் சாவி போட்டு இளைஞர் ஒருவர் திருடிச் சென்றது, சிசிடிவி காட்சியின் மூலம் தெரிய வந்தது.
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது! - 2 Youth has been Arrested For bike Theft
கொரட்டூரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இளைஞர் கைது
அசால்டாக பைக் திருடும் இளைஞர்
இதில் மாதனாங்குப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாலாஜி(21)யையும், அவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.