திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதியில் சில தினங்களுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், அங்கு விடுதியில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் இல்லாமலேயே மாணவர்கள் இருக்கும் போல் போலியாக கணக்கு காட்டி விடுதி நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு மேலும் அரிசி பருப்பு திருடு போனதும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதியின் வார்டன் திருமுருகன், பெரியபாளையம் மாணவர் விடுதி வார்டன் அம்புஜம் ஆகிய இருவரையும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு...' - ஆசிரியர்களிடம் அத்துமீறிய தேனி மாணவன்