சென்னை:இலங்கையிலிருந்து சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது 2 விமானங்களிலும் வந்த, 2 பெண் பயணிகள் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த விமலா ராணி(27), ஜுவாணி(30) ஆகிய இரண்டு பெண் பயணிகள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர்.