தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆயுதப்படை பெண் காவலரிடம் 2 சவரன் செயின் பறிப்பு - பெண் காவலரிடம் 2 சவரன் நகை பறிப்பு

சென்னையில் சினிமா பார்த்து விட்டு திரும்பிய ஆயுதப்படை பெண் காவலரிடம் அடையாளம் தெரியாத இருவர் 2 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.

ஆயுதப்படை பெண் காவலரிடம் 2 சவரன் நகை பறிப்பு
ஆயுதப்படை பெண் காவலரிடம் 2 சவரன் நகை பறிப்பு

By

Published : Jun 18, 2022, 5:52 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்த்த பிரியா (32) சென்னையில் புதுப்பேட்டை நாராயணா தெருவில் வசித்துவருகிறார். ஆயுதப்படை காவலரான இவர் ஓய்வுபெற்ற டிஜிபி லட்சுமிபிரசாத் வீட்டில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு(ஜூன்.17) காவலர் பிரியா தனது நண்பருடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தியேட்டர் படம் பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து காவலர் பிரியா அளித்த புகாரின் பேரில் எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நெல்லையில் 45 சவரன் நகை திருட்டு - அதிமுகவை சேர்ந்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details