தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது - Cellphone theft with two people

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் இருவேறு இடங்களில் இரண்டு நபர்களிடம் செல்ஃபோன் பறித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

By

Published : Feb 10, 2021, 4:14 PM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தங்கம் மாளிகை அருகே ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், எம்எஸ்எம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரியும் முகமது என்பவர் கொருக்குப்பேட்டையிலிருந்து பணி முடித்து இளைய முதலி தெருவில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திக் என்பவர்கள் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக மணிகண்டனை கைது செய்த தனிப்படை காவல் துறையினர் அவரின் கூட்டாளியான கார்த்திக் என்ற காலா ஏற்கனவே ஆர்.கே நகர் காவல் நிலைய வழக்கில் சிறையில் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பெண்ணிடம் செல்ஃபோனை பறித்து சென்ற இளைஞர்களுக்கு வலைவீச்சுc

ABOUT THE AUTHOR

...view details