சென்னை:விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையம் 1, மற்றும் சர்வதேச பயணியர் முனையம் 4 ஆகியவற்றை இணைக்கும் வகையில், கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட புதிய இரண்டு மின்துாக்கிகள் (லிப்ட்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மின்தூக்கிகள் தரைத்தளம், வாக்கலேட்டர் தளமான முதல்தளம், மற்றும் புறப்பாடு பகுதியான இரண்டாம் தளம் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்தூக்கிகள் தரை தளம்,முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் நின்று செல்லும்.
சென்னை விமான நிலையத்தில் 2 புதிய நவீன மின்தூக்கிகள் இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலையம் மற்றும் சா்வதேச விமானநிலையம் இடையே வாக்கலேட்டா்களில் செல்லும் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி விமானநிலையத்திலிருந்து மெட்ரோ ரயில்நிலையத்திற்கு வாக்கலேட்டரில் செல்லும் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.
இந்த மின்தூக்கிகள் இரண்டும் 360 டிகிரியில் பார்வையிடும் வகையில் முழுவதும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்தூக்கிகளில் விளக்குகள் இல்லாமலேயே ஒளி கிடைக்கும் விதத்தில் உள்ளது. அதோடு இந்த மின்தூக்கிகள் திறந்த வெளியில் கண்ணாடி கூண்டுகளில் இயக்கப்படுவதால்,பயணிகள் அச்சமின்றி பயணிக்கலாம்.
சென்னை விமான நிலையத்தில் 2 புதிய நவீன மின்தூக்கிகள் இதனால் பயணிகளிடையே பெரும் வரவேற்பை இந்த மின்தூக்கிகள் பெரும். இதே போல கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட மின்தூக்கிகள், புதிதாகக் கட்டப்பட்டு வரும் நவீன விமானநிலைய முனையத்திலும் நிறுவப்பட உள்ளன. இந்த புதிய 2 மின்தூக்கிகளை, சென்னை விமானநிலைய இயக்குநர் சரத்குமார் நேற்று(ஜூலை.25) தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் தொடர்: நேற்று ஒரே நாளில் 150 வெளிநாட்டு வீரர்கள் வருகை