தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை வந்தது 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள்; நீங்குமா தட்டுப்பாடு? - சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம்

தமிழ்நாட்டில் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் இச்சூழலில், புனேயில் இருந்து 17 பார்சல்களில் 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் இன்று (ஜுன் 28) சென்னை வந்துள்ளன.

2 lakh covishield vaccines arrived in Chennai
2 lakh covishield vaccines arrived in Chennai

By

Published : Jun 28, 2021, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் தமிழ்நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி தட்டுப்பாடு

தற்போது, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாட்டினால், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏற்ப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தது.

17 பார்சல்களில் கோவிஷீல்ட்

இந்நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 17 பார்சல்களில் சுமார் 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை வந்தன. இதனை, சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதன்பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அலுவலர்கள் கொண்டு சென்றனர். இந்த தடுப்பூசிகள், பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 4,804 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details