தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது! - 17 year old girl sexually abused in Chennai

சென்னை: 17வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

போக்சோ சட்டம்  17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை  சென்னையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை  சென்னை பாலியல் வன்கொடுமை வழக்குகள்  Pocso Act  Sexual abuse of a 17-year-old girl  17 year old girl sexually abused in Chennai  Cases of sexual harassment in Chennai
Sexual abuse of a 17-year-old girl

By

Published : Apr 28, 2021, 2:20 PM IST

சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, எட்டாவது வரை படித்துள்ளார். விவரமறியாத சிறுமியை அப்பகுதி இளைஞர்கள் அவ்வப்போது ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று காட்டுப்பகுதியில் உள்ள தனி அறையில் வைத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதே போல், தொடர்ச்சியாக செய்து வந்ததால் சிறுமி கருத்தரித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டி செங்கல்பட்டு அருகே ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்று கருகலைப்பு செய்துள்ளனர். இதனை வெளியில் கூறினால், குடும்பதோடு கொலை செய்துவிடுவதாகவும் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளனர். இதையறிந்த தன்னார்வலர் ஒருவர் இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், கட்டட வேலை செய்யும் கார்த்திக் (36), வழக்கறிஞரின் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் மணிகண்டன் (30), தாம்பரம் தொகுதி திமுக வலைதள பொறுப்பாளர் தனசேகரன் ஆகியோர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதுமட்டுமில்லாமல் பல பேர் சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இதில், கார்த்திக் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனுக்கு திருமணம் ஆகி ஏழு மாதமே ஆகிறது. பின்னர், அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள தனசேகரனை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:13 வயது சிறுமி கடத்தல்: கட்டடத் தொழிலாளி கைது

ABOUT THE AUTHOR

...view details