சென்னை பம்மல் அடுத்த பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரின் மூன்றாவது மகள் ஜனனி (17) தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுதுவதற்கு நன்றாகப் படிக்க வேண்டும் என விநாயகம் ஜனனியிடம் பலமுறை கூறிவந்துள்ளார். ஆனால் ஜனனி சரியாகப் படிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நீ நன்றாகப் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் நான் உன்னிடம் பேச மாட்டேன் என விநாயகம் ஜனனியிடம் கூறியுள்ளார். இதனால் ஜனனி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜன. 09) அதிகாலை வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து பார்த்தபோது ஜனனி படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து சங்கர்நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்துசென்ற காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் தந்தை பேசாமல் இருந்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சங்கர் நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தந்தை பேசாததால் மகள் தூக்கிட்டுத் தற்கொலை!
சென்னை: தந்தை பேசாததால் மன உளைச்சல் ஏற்பட்டு 17 வயது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
இதையும் படிங்க: காசிமேடு கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி மாயமான சிறுவன்!