சென்னை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வருபவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். அவர் பணி புரிந்த குடியிருப்புக்கு அடுத்த குடியிருப்புப்பகுதியில் துப்புரவுப் பணியாளராக நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பணியாற்றி வந்தார். 5 வயது சிறுமி அடிக்கடி விளையாடுவதற்காக சிறுவன் வேலை செய்யும் குடியிருப்புப் பகுதிக்குச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று(ஜூன்.20) வழக்கம் போல சிறுமி விளையாடி விட்டு அழுதுகொண்டே வீட்டிற்குத் திரும்பியுள்ளார். சிறுமியின் தாய் இது குறித்து விசாரித்தபோது 17 வயது சிறுவன் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.