தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் - பள்ளிக்கல்வித்துறை தகவல் - தமிழ்நடு பள்ளிக்கல்வித்துறை

நீட் தேர்வில் 11, 12ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டதோடு, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நீட்
நீட்

By

Published : Jul 19, 2022, 12:57 PM IST

சென்னை:இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடந்த நீட் தேர்வில் 11, 12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டதோடு, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் என்சிஇஆர்டி (NCERT) பாட புத்தகத்தில் இருந்து 38 கேள்விகள் இடம் பெற்றன.

இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு 17ஆம் தேதி நடந்தது. இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், ஆகிய 4 பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒவ்வொரு பாடத்திலிருந்து 50 கேள்விகள் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.

அவற்றுள் மாணவர்கள் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 20 கேள்விகளை விருப்பத்திற்கு ஏற்ப (Choice-ல்) விடலாம். அந்த வகையில் தமிழக பாடத்திட்டத்திலிருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், 38 கேள்விகள் என்சிஇஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வேதியியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 40 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மீதமுள்ள 10 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டன. இதில் மாணவர்கள் 5 கேள்விகளை விருப்பத்தின் படி விடலாம் என்பதன் அடிப்படையில், மாநில பாடத்திட்டத்திலிருந்து 45 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்திருக்க முடியும்.

இயற்பியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 48 கேள்விகள் மாநில பாடத்திட்டத்திலிருந்தும் 2 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்தில் இருந்தும் இடம் பெற்றன. தாவரவியல், விலங்கியல் பாடத்தில் மொத்தம் 74 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் 26 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்தும் கேட்கப்பட்டன. இந்த வகையில் நீட் நுழைவுத்தேர்வில் 162 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன.

எனவே, இதன்மூலம் 11, 12 ஆம் வகுப்பில் மாநிலப் பாடப்புத்தகத்தை நன்றாக படித்த மாணவர்கள் நீட் தேர்வினை சிறப்பாக எதிர் கொண்டு இருக்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே தமிழ்நாட்டில், மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வினை மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எழுதுவது கடினம் எனவும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதியதாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் - நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details