தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 16,000 பேருந்துகள்!

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

diwali special buses
diwali special buses

By

Published : Oct 25, 2021, 10:12 PM IST

சென்னை: பல்லாவரம் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியின்போது இயக்கப்பட்ட பேருந்துகள், அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட 17 பழைய மற்றும் புதிய வழித்தடங்களில் பேருந்துகளின் இயக்கத்தை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 262 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கப்பட்டது.

ஆனால், இந்த முறை 230 ரூபாய்க்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்நோக்கத்தோடு தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் ஆறு இடங்களில் இருந்து 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details