மக்கள் நல்வாழ்வுத்துறை ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 642 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 15 ஆயிரத்து 666 பேருக்கும், கர்நாடகம் - ஆந்திராவிலிருந்து வந்த 8 பேருக்கும் என 15 ஆயிரத்து 684 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 365 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 13 ஆயிரத்து 625 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 76 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் என 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக நான்காயிரத்து 250 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 142 பேருக்கும், கோயம்புத்தூரில் ஆயிரத்து 56 பேருக்கும், திருவள்ளூரில் 838 பேருக்கும், மதுரையில் 524 பேருக்கும், ஈரோட்டில் 515 பேருக்கும், தூத்துக்குடியில் 503 பேருக்கு தொற்று இன்று புதிதாக பதிவாகியுள்ளது.
அதே போல் மிகக் குறைந்த அளவாக பெரம்பலூரில் 24, அரியலூரில் 43, நீலகிரியில் 57, திருவாரூரில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.