சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 523 ஆசிரியர்களுக்கு, புதுமை ஆசிரியர் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
'15 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்' - செங்கோட்டையன் அறிவிப்பு! - அரசு பள்ளி மாணவர்கள்
சென்னை: "இணையத்தில் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்க, 15 லட்சம் டேப்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பின்னர் அவர் பேசுகையில், "பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். அதன்மூலம் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு திறனை வளர்ப்பதற்கு, மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அரசு பள்ளியில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்து எளிதாக படிக்க முடியும்" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியிடப்படும்" என கூறினார்.