தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஐஐடியில் வளாக வேலைவாய்ப்பு மூலம் 1,430 பணி நியமனங்கள்

சென்னை ஐஐடியில் வளாக வேலைவாய்ப்பு மூலம் 45 சர்வதேச வேலைகள் உட்பட 1,430 பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 8, 2022, 9:19 PM IST

சென்னைஐஐடியில் வளாக வேலைவாய்ப்புகள் மூலமாக, ஒரே கல்வியாண்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்கள் கிடைத்துள்ளன. 2021-22ஆம் கல்வியாண்டில் 2 கட்டங்களாக நடந்த வளாக வேலைவாய்ப்புகள் முகாம்களின் மூலம் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன.

பணி நியமனங்கள்

கோடைக்கால இன்டர்ன்ஷிப் பயிற்சியின் மூலம் கிடைத்த 231 முன்வேலைவாய்ப்புகளும், 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் சேர்த்து மொத்தத்தில் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. 2018-19ஆம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.

131 புத்தாக்க நிறுவனங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட வளாக வேலைவாய்ப்பின்போது, 199 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. நடப்பு சீசனில் 61 எம்.பி.ஏ. மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், சென்னை ஐஐடியின் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான வளாக வேலைவாய்ப்புகளின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.21.48 லட்சம் ஆகும். பெறப்பட்ட அதிகபட்ச சம்பளம் USD 250,000 ஆகும். 2021-22ஆம் ஆண்டில் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்தவர்களில் 80% மாணவர்கள், 2021-22ஆம் ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களைப் பெற்றுள்ளனர்.

சென்னை ஐஐடி வேலைவாய்ப்புக்கான முக்கிய காரணிகள் குறித்து வேலைவாய்ப்பு ஆலோசகர் சி.எஸ்.சங்கர் ராம் கூறும்போது, கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு மதிப்பினை வேலைவாய்ப்புகள்தான் மூலம்தான் பிரதிபலிக்கின்றன. 2021-22ஆம் ஆண்டில் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் வகையில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் மிகக் சிறந்த பாடப்பயிற்சி, இணைப் பாடப்பயிற்சி வாய்ப்புகளுக்கு இது சான்றாக விளங்குகிறது. முதல்கட்டத்தில் மொத்தம் 45 சர்வதேசப் பணிநியமனங்கள் கிடைத்துள்ளன. இதில் 11 இடங்களை ரகுடேன் மொபைல் (Rakuten Mobile) நிறுவனம் வழங்கியுள்ளது.

க்ளீன், மைக்ரான் டெக்னாலஜிஸ், ஹோண்டா ஆர்&டி., கொஹெஸ்டி, டா வின்சி டெரிவேட்டிவ்ஸ், அக்சென்டர் ஜப்பான், ஹிலாப்ஸ் இன்க்., க்வாண்ட்பாக்ஸ் ரிசர்ச், மீடியாடெக், மணி ஃபார்வர்டு, ரூபிக், டெர்ம்கிகரிட், ஊபர் போன்ற சர்வதேச நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.

நடப்பாண்டில் தரவு அறிவியல் & பகுப்பாய்வு துறையில் (Data Science and Analytics) 17 சதவீதமும், அடிப்படைப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (Core Engineering and Technology) 42%-ம், நிதிச் சேவைகள் (Financial Services) 6%-ம், தகவல் தொழில்நுட்பம் & மென்பொருள் தயாரிப்பு 17%-ம், மேலாண்மை பிரிவில் 6%-ம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) 10%-ம், கல்வியியல் பிரிவில் 2%-ம் கிடைத்துள்ளது.

2021-22ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்களில், எக்சல் சர்வீஸ் (EXL Service) 28 பேருக்கும், ஓலா (OLA Mobility) 27 பேருக்கும், இஒய் இந்தியா (EY India) 23 பேருக்கும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) 22 பேருக்கும், மைக்ரோசாப்ட் இந்தியா பி.லிட் (Microsoft India Pvt. Ltd) 19 பேருக்கும், இக்வியா (IQVIA) 18 பேருக்கும், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) 17 பேருக்கும், என்ஃபேஸ் எனர்ஜி (Enphase Energy) 17 பேருக்கும், குவால்கம் (Qualcomm) 17 பேருக்கும், கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) 17 பேருக்கும், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Texas Instruments)15 பேருக்கும், பஜாஜ் ஆட்டோ லிட் (Bajaj Auto Ltd) 15 பேருக்கும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட் (TVS Motor Company Ltd) 14 பேருக்கும், டெலாய்ட் இந்தியா (Deloitte India) 14 பேருக்கும், இண்டெல் (Intel) 14 பேருக்கும், நைஜீரியா (Nigeria) 13 பேருக்கும், வெல்ஸ் ஃபார்கோ இண்டர்நேஷனல் சொலுசன்ஸ் பி. லிட். (Wells Fargo International Solutions Private Limited) 13 பேருக்கும், கோல்ட்மேன் சாக்ஸ்& கோ எல்எல்சி (Goldman Sachs & Co. LLC) 13 பேருக்கும், இண்டஸ் இன்சைட்ஸ் & அனாலிடிக்கல் சர்வீசஸ் பி.லிட் (Indus Insights and Analytical Service Pvt. Ltd) 12 பேருக்கும், ப்ளிப்கார்ட் இண்டர்நெட் பி.லிட் (Flipkart Internet Pvt Ltd) 12 பேருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஐடி இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் தொடரும் விதிமீறல்கள் - வெங்கடேசன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details