தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக 13ஆவது பட்டமளிப்பு விழா  எப்போது தெரியுமா..? - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தேதியில் நடக்கும்
எந்த தேதியில் நடக்கும்

By

Published : May 22, 2022, 8:18 PM IST

சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா வரும் மே 30ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் பல்கலைக் கழகத்தின் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என். ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோட்டி கலந்துக் கொள்கின்றனர். இந்த விழாவில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேர்வு வாரியாக முதல் தரம் பெற்ற மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

பட்டமளிப்பு விழாவினை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டச்சான்றிதழ்களை அவரின் இருப்பிடங்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொறியியல், டிப்ளமோ கட்டணத்தை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details