தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்' - தமிழ்நாடு அரசு அனுமதி - பக்கிங்காம் கால்வாயை தூர்வாறும் பணி

தமிழ்நாடு அரசு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் ஆகியப் பணிகளுக்கு ரூ.139 கோடி மதிப்பீட்டில் 18 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சுமார் 36,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் (Chepauk Stadium’s new pavilion) உலகின் சிறந்த மைதானமாக மாற உள்ளது.

தமிழ்நாடு அரசு அனுமதி
தமிழ்நாடு அரசு அனுமதி

By

Published : Mar 16, 2022, 4:32 PM IST

சென்னைசேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு இன்று (மார்ச் 16) தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் (Chepauk Stadium’s new pavilion) உலகின் சிறந்த மைதானமாக சேப்பாக்கம் மைதானம் தயாராகிறது.

சேப்பாக்கம் வழங்கும் ரூ.70 லட்சம்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை, விரிவாக்கம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.20 லட்சமும், அடையாறு ஆற்றினை தூய்மைப்படுத்த ரூ.25 லட்சமும், பக்கிங்காம் கால்வாயைத் தூர்வார, தூய்மைப்படுத்த ரூ.25 லட்சமும் சேப்பாக்கம் மைதானம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

நிபந்தனைகள்

  1. மைதானத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை எடுத்துச்செல்லும் முறை மற்றும் அதற்கான திட்டத்தை முறைப்படி தயார் செய்ய வேண்டும்.
  2. நீர்நிலை மற்றும் நீரோட்டம், சார்ந்த இடங்களில் விரிவாக்கப்பணிகள் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும்.
  3. மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை. ஒருவேளை மரங்களை வேரோடு பிடுங்கினால் அதனை மாற்று இடத்தில் நட வேண்டும்.
  4. புதிய கட்டுமானத்தால் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  5. பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
  6. பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போதுமான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
  7. குடிநீர், கழிவுநீர், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  8. பார்வையாளர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  9. போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றிற்கு இடமளிக்காத வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: என்ன முடிவு எடுக்கப்போகிறது மாநில தேர்தல் ஆணையம்? - விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details