சென்னை: சென்னை சாலைகளில் பிரதான சிக்னல்களில் குழந்தைகள் கார் கண்ணாடிகளை தட்டியும், இரு சக்கர வாகன ஓட்டிகளிடமும் பிச்சை எடுக்கும் காட்சி என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத காட்சியாகவே அமைந்துள்ளது. அதில் பெரும்பாலான குழந்தைகள் வெளிமாநில குழந்தைகளாக இருப்பார்கள். குடும்ப வறுமைக்காக, பசிக்கொடுமைக்காக குழந்தைகள் கையேந்துவதோடு, சட்டவிரோதமாக சில கும்பல்களால் பிச்சை எடுக்கும் தொழில் செய்வதும் நிகழ்ந்து வருகிறது.
தற்போது இது போன்ற குழந்தைகளை மீட்கும் பணியில் சென்னை காவலர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பு பிரிவின் கீழ் செயல்படும் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு ஈடுபட்டு வருகிறது. இந்தப் பிரிவு காவலர்கள் கடந்த ஆண்டு மட்டும் 135 குழந்தைக்ளை மீட்டு குழந்தைகள் நலக்குழு, அரசு குழந்தைகள் விடுதிகளிலும், தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாது பல குழந்தைகளை மீட்டு பெற்றொரிடமும் ஒப்டைத்துள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிகார் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தரகர்கள் சென்னை அழைத்து வந்து பிச்சை எடுக்கும் தொழிலும், பொருள்களை விற்கும் தொழிலில் ஈடுபடுத்துவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். அவ்வாறு வெளிமாநிலத்தில் இருந்து வரும் குழந்தைகள் பெற்றோர்களின் வறுமை காரணமாகவும், சிலர் சம்பாதிக்கும் நோக்கில் பெற்றோர்களே விற்கும் கொடுமை நிகழ்வதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் 2020இல் 135 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு! - Chennai district news
சென்னையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது போன்ற தொழிலில் ஈடுபடும் குழந்தைகளை மீட்பதில் குழந்தைகள் நலப்பாதுகாப்பு பிரிவு காவலர்கள் களம் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 135 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற குழந்தைகள் கடத்தும் தரகர்களை பிடிக்க சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே காவலர்களுடன் இணைந்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் குழந்தை திருமணம், கொடுமைப்படுத்துதல், குழந்தை தொழிலாளர், கடத்தப்பட்ட குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் என 1,263 குழந்தைகளை மீட்டு குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 438 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். சிறப்பு நடவடிக்கையாக பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரும் தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த கட்டமாக குழந்தை தொழிலாளர்கள் மீட்பதற்கான் சிற்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா!