தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் பாதியிலேயே நின்ற லிப்ட்... சிக்கிய 13 பேர்... - 13 stuck in chennai elevator

நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதியிலேயே நின்றதால் 13 பேர் சிக்கிக் கொண்டனர்.

சென்னையில் பாதியிலேயே நின்ற லிப்ட்... சிக்கிய 13 பேர்...
சென்னையில் பாதியிலேயே நின்ற லிப்ட்... சிக்கிய 13 பேர்...

By

Published : Mar 14, 2022, 6:41 AM IST

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக லிப்ட் செயல்பட்டு வருகிறது. இந்த லிப்ட் நேற்றிரவு 8 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதியிலேயே நின்றது. அப்போது உள்ளே ஒன்றரை வயது குழந்தை உள்பட 13 பேர் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் கூச்சலிடவே தொழில்நுட்ப குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி தொடங்கியது. வெகுநேரமாகியும் மீட்க முடியாததால், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் பாதியிலேயே நின்ற லிப்ட்

அதன்படி அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் லிப்ட்டின் மேற்பரப்பிலிருந்த மின் விசிறியைக் கழற்றி, அந்த துவாரம் வழியாக ஒவ்வொருவராக மீட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details