தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து - 12th exam cancelled in tamil nadu
20:16 June 05
12ஆம் வகுப்பு தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், தள்ளி வைப்பது குறித்தும் பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற ஆலோசனையின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். அதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதேபோல மாநில கல்வி திட்டத்தின் கீழ் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்'- மகேஷ் பொய்யாமொழி