சென்னை அடுத்த பழைய பல்லாவரம் புதுதெருவை சேர்ந்தவர் தணிகைவேல். இவர் டெய்லராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சாய்ராம் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் விக்னேஷ் (18) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் திருநீர்மலை பெருமாள் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, விக்னேஷ் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.