தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1289 பேருக்கு கரோனா பாதிப்பு! - தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 1289 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Corona
Corona

By

Published : Mar 21, 2021, 7:45 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 1289 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து செங்கல்பட்டு வந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3ஆவது நாளாக கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.

இதனால் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 903ஆக உயர்ந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை மார்ச் 21ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 75 ஆயிரத்து 35 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் மாநிலத்தில் இருந்த ஆயிரத்து 280 நபர்களுக்கும், இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டிற்கு ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 1289 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 84 லட்சத்து 61 ஆயிரத்து 284 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் மாநிலத்தில் இருந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 982 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 7 ஆயிரத்து 903 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 668 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 480 என உயர்ந்துள்ளது.

சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகளும், தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் என ஒன்பது நோயாளிகள் இன்று இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 599ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகைபுரிந்த ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் புதிதாக 466 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 138 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 109 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 73 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 72 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 35 நபர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 நபர்களுக்கும் என அதிக அளவில் வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ளது.

சென்னையில் தற்போது 2,985 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 750 நோயாளிகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 687 நோயாளிகளும் ,திருவள்ளூர் மாவட்டத்தில் 514 நோயாளிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 447 நோயாளிகளும் என அதிக அளவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை மாட்டம் - 2,41,623
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 57,132
  • செங்கல்பட்டு மாவட்டம் - 54,347
  • திருவள்ளூர் மாவட்டம் - 45,109
  • சேலம் மாவட்டம் - 33,049
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 29,941
  • கடலூர் மாவட்டம் - 25,358
  • மதுரை மாவட்டம் - 21,467
  • வேலூர் மாவட்டம் - 21,237
  • திருவண்ணாமலை மாவட்டம் - 19,582
  • திருப்பூர் மாவட்டம் - 18,858
  • தஞ்சாவூர் மாவட்டம் - 18,776
  • தேனி மாவட்டம் - 17,222
  • கன்னியாகுமரி மாவட்டம் - 17,297
  • விருதுநகர் மாவட்டம் - 16,764
  • தூத்துக்குடி மாவட்டம் - 16,432
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 16,305
  • திருநெல்வேலி மாவட்டம் - 15,889
  • விழுப்புரம் மாவட்டம் - 15,343
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 15,237
  • ஈரோடு மாவட்டம் - 15,060
  • புதுக்கோட்டை மாவட்டம் - 11,752
  • நாமக்கல் மாவட்டம் - 11,934
  • திண்டுக்கல் மாவட்டம் - 11,686
  • திருவாரூர் மாவட்டம் - 11,582
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10,921
  • தென்காசி மாவட்டம் - 8,616
  • நாகப்பட்டினம் மாவட்டம் - 8,790
  • நீலகிரி மாவட்டம் - 8,508
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 8,289
  • திருப்பத்தூர் மாவட்டம் - 7,689
  • சிவகங்கை மாவட்டம் - 6,875
  • ராமநாதபுரம் மாவட்டம் - 6,504
  • தருமபுரி மாவட்டம் - 6,731
  • கரூர் மாவட்டம் - 5,577
  • அரியலூர் மாவட்டம் - 4,771
  • பெரம்பலூர் மாவட்டம் - 2,299
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 965
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,047
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details