இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் 72 ஆயிரத்து 122 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஒரு கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 37 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் மேலும் 1218 பேருக்கு கரோனா... 1296 பேர் மீட்பு - Number of people undergoing corona testing in Tamil Nadu
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 12) ஆயிரத்து 218 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன் மூலம், 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது 10, 208 நபர்கள் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று ஆயிரத்து 296 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது.
இன்று 13 பேர் உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 883ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 226 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,19,526
கோயம்புத்தூர் - 50317
செங்கல்பட்டு - 48647
திருவள்ளூர் - 41709
சேலம் - 30709
காஞ்சிபுரம் - 28117
கடலூர் - 24420
மதுரை - 20089
வேலூர் - 19771
திருவண்ணாமலை - 18881
தேனி - 16722
தஞ்சாவூர் - 16706
விருதுநகர் - 16104
தூத்துக்குடி - 15853
கன்னியாகுமரி - 15975
ராணிப்பேட்டை - 15748
திருநெல்வேலி - 15041
விழுப்புரம் - 14770
திருப்பூர் - 16142
திருச்சிராப்பள்ளி - 13730
ஈரோடு - 13007
புதுக்கோட்டை - 11260
கள்ளக்குறிச்சி - 10726
திண்டுக்கல் - 10583
திருவாரூர் - 10663
நாமக்கல் - 10750
தென்காசி - 8163
நாகப்பட்டினம் - 7859
திருப்பத்தூர் - 7342
நீலகிரி - 7662
கிருஷ்ணகிரி - 7619
ராமநாதபுரம் - 6255
சிவகங்கை - 6407
தருமபுரி - 6225
அரியலூர் - 4606
கரூர் - 4969
பெரம்பலூர் - 2250