தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு 31ஆம் தேதி வெளியீடு - 11th exam result

11th exam result
11th exam result

By

Published : Jul 29, 2020, 2:27 PM IST

Updated : Jul 29, 2020, 3:50 PM IST

14:16 July 29

சென்னை: பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும், 12ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் ஜூலை 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற மறுதேர்வு முடிவுகளும் 31 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடத்தினை பதிவுசெய்து தேர்வு முடிவுகளை 

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு குறுந்தகவல் வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். தனித்தேர்வர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கும் பொழுது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வுமுடிவுகள் அனுப்படும்.

விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த அதற்கான தேதி மற்றும் இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வு துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Jul 29, 2020, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details