கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து தற்போதுவரை முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பின் பதினோராம் வகுப்பு மாணவர சேர்க்கை தொடங்கியது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில், "பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது, சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்தது என தெரிவித்துவருவதாக அறியமுடிகிறது.
அதனால், நடப்பு கல்வியாண்டில், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது அவர்களுக்கு சேர்க்கை அளிக்க வேண்டும். அதனை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிடுள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வில் தகுதி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!