இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
உலக அளவில் வரலாறு காணாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்தியாவும் போராடி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் எந்தளவுக்கு முழு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட சுய ஊரடங்கே சாட்சியாகும்.
குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, வல்லுநர்கள் அறிவுறுத்திவருகின்றனர். அதனாலேயே, நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் முடங்கியது நாட்டின் தலைநகர்!