தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் - ஸ்டாலின் - 11th and 12th class examinations should be postponed

சென்னை: 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

MK Stalin
MK Stalin

By

Published : Mar 23, 2020, 8:01 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக அரசு அறிவித்திருப்பது கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அலட்சியப்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் அதிமுக அரசு விபரீத விளையாட்டு நடத்துவது கவலைக்குரியது மட்டுமின்றி கடும் கண்டனத்துக்குரியது.

ஆகவே, மாணவர்களின் நலன்கருதி 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அரசு ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்பெயினிலிருந்து திரும்பிய கோவை மாணவிக்கு கரோனா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details