சென்னை:முதலமைச்சரின் குறைதீர் திட்டத்திற்கும், அம்மா அழைப்பு மைய எண்ணான 1100 எண்ணே பயன்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள ஆணையில், "கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 உடன் தமிழ்நாடு பொதுமக்களின் குறைகளை நிவர்த்திசெய்ய சென்னையில் அம்மா அழைப்புதவி மையங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொது குறை தீர்க்கும் முதலமைச்சர் ஹெல்ப்லைன் மேலாண்மை அமைப்பு அமைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஐ.ஐ.பி.ஜி.சி.எம்.எஸ். 100 இருக்கைகள் கொண்ட முதல்வர் ஹெல்ப்லைன் அழைப்பு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.