தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் 11 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

school education department
பள்ளிக்கல்வித்துறை அறிக்கை

By

Published : Feb 4, 2021, 10:17 PM IST

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் இன்று (பிப். 4) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாவட்டம் எஸ்எஸ் குளம் மாவட்ட கல்வி அலுவலராக விஜயேந்திரன், கோயம்புத்தூர் மாவட்ட கல்வி அலுவலராக பாண்டிய ராஜ சேகரன், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலராக கலாவதி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பெ. பாலசுப்பிரமணியம், தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக எம்பெருமாள், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலராக ஆ. பாலசுப்பிரமணியம், வேடச்சந்தூர் மாவட்ட கல்வி அலுவலராக கீதா, செந்துறை மாவட்ட கல்வி அலுவலராக சிவராமன், வள்ளியூர் மாவட்ட கல்வி அலுவலராக உஷா சாந்தாஜாய், திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலராக சின்னராசு, சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக ராமசுப்பு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details