தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மறு கூட்டல், மறு மதிப்பீடு - 1,500 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம்! - மறு கூட்டல் மறுமதிப்பீடு

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறு கூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

revaluvation
revaluvation

By

Published : Aug 3, 2022, 4:56 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகியுள்ளன. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி சுமார் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details