கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மார்ச் 27ஆம் தேதி தொடங்க இருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது வரை கரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதனால், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் அரசு நடிவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
10ஆம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு...! - 10th Class Lessons Broadcast on Package TV
சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 10ஆம் வகுப்பு பாடங்கள் நேற்று (15.4.2020) முதல் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதிகளிலிருந்து யாரும் வெளியில் வராத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 10ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்கல்வி செல்வதற்காகவும், வேலைக்கு செல்வதற்காகவும் தேர்வை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள விடுமுறையை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு தேர்விற்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தயார் செய்யப்பட்டு நாள்தோறும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களிடம் பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியின் மூலம் நேற்று (15-04-2020) முதல் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மாணவர்கள் ஏற்கனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என்பது கல்வியாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.