தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல நடத்த உத்தரவு - revision exam postponed 2022

நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10th-and-12th-revision-exams-must-to-be-conduct-as-public-exam-in-tamilnadu
10th-and-12th-revision-exams-must-to-be-conduct-as-public-exam-in-tamilnadu

By

Published : Feb 7, 2022, 3:27 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அட்டவணையின்படி, "ஒமைக்ரான் பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது.

அதேபோல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் 28ஆம் தேதிமுதல், ஏப்ரல் 4ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதிமுதல் ஏப்ரல் 5ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

அதன்படி தேர்வுகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை, தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசு தேர்வு துறையின்படி, பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

இந்த தேர்வை பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தும்படி இருக்க வேண்டும். அதேபோல கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details