சென்னை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.