சென்னை விமான நிலையம் மற்றும் சரக்கக சுங்க இலாகா அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ராஜன் சவுத்ரி, ”சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 10 மாத கரோனா ஊரடங்கு காலத்தில், குற்றங்களை தடுப்பது மிகுந்த சவாலாக இருந்தது. கரோனா காலத்தில் பன்னாட்டு முனையத்திற்கு 540 சிறப்பு விமானங்கள் வந்தன. அதில், 2 லட்சம் பேர் வரை பயணம் செய்தனர்.
இக்காலங்களில், பன்னாட்டு சரக்ககம் மற்றும் பன்னாட்டு தபால் நிலையங்களில் கடத்தப்பட்டதாக, ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள, 102 போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 11 பேர் பிடிபட்டனர். மேலும், தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய 80 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.46 கோடி மதிப்பிலான 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.