தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினா-கோவளம் கடற்கரைப் பகுதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி - மெரினா முதல் கோவளம் இடையேயான கடற்கரைப் பகுதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்

மெரினா முதல் கோவளம் கடற்கரைப் பகுதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

By

Published : Apr 21, 2022, 6:42 AM IST

சென்னை மெரினா முதல் கோவளம் இடையேயான சுமார் 30 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை கடற்கரை ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் புதிய 33 அறிவிப்புகளை இன்று (ஏப்.20) அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி,

1. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் (SAP) இளநிலை திட்டமிடல் (B.Plan) என்ற பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் ரூபாய் 10 கோடி நிதி வழங்கும்.

2.பெருந்திரள் துரித இரயில் (MRTS) மனித நிலையங்களில் வணிக செயல்பாடுகள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்படும்.

3. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வாடகைதாரர்கள் சட்டம் 2017 மற்றும் நிறைவேற்றப்பட உள்ள தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டங்களை செயல்படுத்தும் ஒழுங்குமுறை அதிகாரம் பெற்ற வீட்டுவசதி துறை இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

4. திருமழிசை, மீஞ்சூர் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும்.

5. மதுரையில் உள்ள தோப்பூர் உச்சப்பட்டி துணை நகரத்திற்கு புதுநகர் ஊரமைப்பு இயக்கத்தால் தயாரிக்கப்படும்.

6. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் திருமழிசை திட்டப்பகுதியில் 16.92 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1280 கோடி மதிப்பீட்டில் , பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்..

7. 60 இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 10,000 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மறுகட்டுமானம் செய்யப்படும்.

8. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்கப்பட்ட குடியிருப்பு வளாகங்கள் மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்கு வாரியம் துணை புரியும்.

9. நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கான வாங்கும் திறனுக்கேற்ற் குடியிருப்புகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.

10. தன்னடக்கம் ஆடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அளித்தல்

11. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையே சுமார் 30 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை கடற்கரை. ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும்.

12. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நீர் முனை மற்றும் ஏரிக்கரை மேம்பாடு ரூபாய் 100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

13. சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும்.

14. செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்படும்.

15. மாநில அளவில் நகர்ப்புற திட்டமிடுதல் என தகுதியான அலுவலர்களை கொண்ட தொகுப்பினை பணி விதிகள் மற்றும் மாற்றுப்பணி நிபந்தனைகளுடன் உருவாக்கப்படும்.

16. தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971 மறு ஆய்வு செய்ய அகமதாபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடல் தொழில்நுட்ப மையத்தினரை கலந்த ஆலோசகராக நியமனம் செய்தல்,

17. தமிழகத்தில் 10 லட்சம் பேரும் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில், நகரமயமாக்களை ஒழுங்கு படுத்தி திட்டமிட்ட நகரங்களை உறுதி செய்திட நகர வளர்ச்சி குழுமங்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் ஏற்படுத்தப்படும்.

18. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் 2.60 ஏக்கர் உன் நிலப்பரப்பில் ரூபாய் 133 கோடி மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.

19. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மாவட்டம் திருவான்மியூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் சுய நிதி திட்டத்தின் கீழ் 3.18 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 105.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

20. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 125 மேம்படுத்தப்பட்ட மனைகளில் ரூபாய் 59 கோடி மதிப்பீட்டில் பொது தனியார் கூட்டு முறையில் குடியிருப்புகள் கட்டப்படும்.

21. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் 0.21 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

22. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் மற்றும் பருத்திபட்டில் ரூபாய் 26 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் அண்ணா நகரில் ரூபாய் 8.37 கோடி மதிப்பீட்டிலும் அலுவலகங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படும்.

23. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சென்னை மாவட்டம் திருமங்கலத்தில் ஜீரோ புள்ளி 0.63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

24. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் 0.78 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 34 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

25. கோயம்புத்தூர் திருப்பூர் ஓசூர் மற்றும் AMRUT திட்டத்தின் கீழ் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 நகரங்கள் உட்பட 20 நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் இந்நிதி ஆண்டு இறுதிக்குள் நகர் ஊரமைப்பு இயக்கத்தால் நிறைவேற்றப்படும்.

26. நகர் ஊரமைப்பு இயக்கத்தின் உதவி இயக்குநர்கள் மற்றும் கட்டடக்கலை திட்ட உதவியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

27. மக்கள் தொகை 50,000 முதல் 99,999 வரை உள்ள 71 நகரங்களுக்கு சீரான வளர்ச்சியை உறுதிசெய்ய புவியியல் தகவல் அமைப்பின் அடிப்படையில் முழுமை திட்டங்கள் மறுஆய்வு நகர் ஊரமைப்பு இயக்கத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.

28. திட்ட அனுமதிகளை எளிதில் பெறும் வகையில் நகர் ஊரமைப்பு மாவட்ட அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

29. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைக்கவும், அதன் சிறந்த பயன்பாட்டினை அறியவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

30. இரண்டாம் முழுமைத் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் முன்மொழியப்பட்டுள்ள 40 சாலை விரிவாக்கப் பணிகளில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நிதி ஆண்டில் 10 சாலை விரிவாக்கப் பணிகள் ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

31. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள 15 ஏக்கர் மற்றும் போரூரில் உள்ள இருபத்தி ஒரு ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

32. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எல்லைக்குள் வலைப்பின்னல் சாலை அமைப்பு ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

33. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சுமார் ரூபாய் 53 கோடியில் வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: விதிகளை மீறி குப்பைகளை கொட்டியவர்கள்: 6 லட்சம் வரை அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details