தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10 ஆண்டுகளாக இழப்பில் டாஸ்மாக் கடைகள் - ஆர்.டி.ஐ பதில் - ஆர் டி ஐ பதில்

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று மக்கள் மத்தியில் பேசுவது வழக்கம். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி 2010ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை டாஸ்மாக் கடைகள் இழப்பை சந்தித்துள்ளதாக ஆர்.டி.ஐ பதிலில் தெரியவந்துள்ளது.

10 ஆண்டுகளாக இழப்பில் டாஸ்மாக் கடைகள்
10 ஆண்டுகளாக இழப்பில் டாஸ்மாக் கடைகள்

By

Published : Oct 29, 2021, 10:52 AM IST

சென்னை: பழனியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் எவ்வளவு இழப்பைச் சந்தித்துள்ளது என்று கோரியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு வாணிப கழகம் 2010-11 நிதியாண்டில் வருமான வரிக்கு முந்தைய இழப்பு 3.56 கோடி ரூபாயும், 2011-12இல் 1.25 கோடி ரூபாயும், 2012-13 ல் 103.6 கோடி ரூபாயும், 2013-14 ல் 64.44 கோடி ரூபாயும், 2015-16 ல் 67.61 கோடி ரூபாயும், 2019-2020 71.93 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்

மேலும், 2020-2021 நிதியாண்டுக்கான இழப்பு கணக்கு தொகுக்கப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து மேல் முறையீடு செய்ய விரும்பினால் இத்தகவல் கிடைக்கப்பெற்ற 30 நாள்களுக்குள் அவ்வாறு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் பண்டிகை: ரூ 416 கோடிக்கு மது விற்பனை

ABOUT THE AUTHOR

...view details