கணவன் மற்றும் அவரது வீட்டாரால் ஏற்படும் வரதட்சணை கொடுமை மரணங்களுக்கு, அக்குற்றங்களில் குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை, பேரவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். அதன்படி, பிரிவு 304 இல் வரதட்சணை தொடர்பான குற்றங்களுக்கு, தண்டனை 7லிருந்து 10 ஆண்டுகளாகவும், பிரிவு 354 இல் குற்றநோக்கத்துடன் ஆடை களைத்தலுக்கான அதிகபட்ச தண்டனை 7லிருந்து 10 ஆண்டுகளாகவும் ஆகிறது.
வரதட்சணை குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை! பேரவையில் மசோதா தாக்கல்! - சி.வி.சண்முகம்
சென்னை: வரதட்சணை மரணங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
shanmugam
மேலும், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் பொருட்டு, இந்திய தண்டனை தொகுப்பு சட்டத்தின் 304B ,354b, 354d, 372 மற்றும் 373 ஆகியவற்றுக்கு குற்றங்களின் தண்டனையை 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகப்படுத்தும் சட்டமுன் வடிவையும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் இருமடங்கு துணை மின்நிலையங்கள்!