தமிழ்நாட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கிவரும் குடிநீர் ஆலைகளை மூடி, மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி தலைமையில் வருவாய் துறையினர் ஆவடி சுற்றுவட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை இன்று ஆய்வு செய்தனர்.
அனுமதியின்றி செயல்பட்ட 10 குடிநீர் ஆலைகளுக்கு சீல்! - குடிநீர் ஆலைகள்
சென்னை: ஆவடியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 குடிநீர் ஆலைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
company
அப்போது ஆவடி, வெள்ளானூர், மோரை, அயப்பாக்கம், காட்டூர், பம்பதுகுளம், திருமுல்லைவாயில் உள்ளிட்டப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து ஆவடி வட்டத்தில் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கழிவுநீரில் காய்கறிகளைக் கழுவிய வண்டிக்காரர் - சுற்றிவளைத்த பொதுமக்கள்!