சென்னை:பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆன்-லைன் வழியில் நடத்தப்பட்டன.
தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை அன்றைய தினத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அவ்வாறு அனுப்பாமல் காலதாமதமாக அனுப்பிய மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என (Absent) வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
அந்த வகையில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை அனுப்பி வைக்காததால், அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
10 ஆயிரம் மாணவர்கள் வரை தற்போது ஆப்சென்ட் வழங்கப்பட்டுள்ளதால் தற்போது தோல்வியடைந்து இருக்கக்கூடிய பாடங்களை அடுத்து வரவிருக்கும் செமஸ்டர் தேர்வுகளின் போது தோல்வியடைந்த பாடங்களை அரியர் தேர்வாக மாணவர்கள் எழுத வேண்டிய நிலை ஏற்படும் என தகவல் பரவியது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "தேர்வு வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி, சில தேர்வர்கள் விடைத்தாள்களை தாமதமாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இதுபோன்று, எத்தனைப் பேர் உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும், இவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்வது குறித்து எந்தவிதமான முடிவும் மேற்கொள்ளப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மூளை பாதிப்பை அறிய ஆராய்ச்சி மையம்